பல்லவர் - Pallava Kings

பல்லவர்
ஆட்சிக் கால விபரங்கள்.

காலம் (A.D.) மன்னர்கள்
550- சிம்மவர்மன்
-600 சிம்மவிஷ்ணு
600-30 மஹேந்திரவர்மன் I
630-68 நரசிம்மவர்மன் I
668-70 மஹேந்திரவர்மன் II
670-700 பரமேஸ்வரவர்மன் I
700-28 நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்)
728-31 பரமேஸ்வரவர்மன் II
731-96 நந்திவர்மன் II (பல்லவமல்லன்)
796-847 தண்டிவர்மன்
847-69 நந்திவர்மன் III
869- நிருபதுங்கன்
885- அபராஜிதன்
-912 கம்பவர்மன்

சின்னம்: காளை.
தலைநகர்: காஞ்சிபுரம்.

கி.பி.600க்கு முந்தைய பல்லவ வரலாற்றுக்கு தெளிவான சான்றுகள் கிட்டவில்லை. சன்மானம் வழங்கி குறிக்கபட்ட செப்புப்
பட்டயங்களில் சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன், புத்தவர்மன் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.

பல்லவர்கள் ஒரு புறமும், பாண்டியர்கள் மற்றொரு புறமும் தொடர்ந்த தாக்குதல்களால் மதுரையை ஆண்ட களப்பிரர்களின்
ஆட்சி முடிவுக்கு வந்தது. சிம்மவிஷ்ணுவின் பரக்கிரமங்கள் பல்லவ ஆட்சியை காவேரிக்கரை வரை நீட்டியது.

முதலாம் மஹேந்திரவர்மன் புகழ் பெற்று விளங்கினான். தேர்ந்த கவிஞன், பாடகனும் கூட. தனிப் பாறையை குடைந்து கோவில் கட்டும் புதிய முறையை புகுத்தினான். சமணத்திலிருந்து (Jainism) சைவ சமயத்திற்கு மாறினான்.

பல்லவர்களுக்கு சாளுக்கியர்கள் எப்போதுமே எதிரிகள். மஹேந்திரவர்மனுக்கு சாளூக்கிய இரண்டாம் புலிகேசி தொடர்ந்து
தொல்லை கொடுத்தான். முதலாம் நரசிம்மவர்மன் சாளூக்கியரை வென்றான். இலங்கையில் மனவர்மனுக்கு மீண்டும் மணிமுடி சூட்டினான். இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்) அராபியர்களுடன் போரிட்டு சீனத்திற்கு வர்த்தக வழிகளை நிலைநிறுத்தினான்.

கடைசியில் நிருபதுங்கனுக்கும் அபராஜிதனுக்குமிடையில் ஏற்பட்ட வாரிசு மோதலில், அபராஜிதனுக்கு உதவிக்கு வந்த சோழன் அவர்களை வென்றான். பின்னர் பல்லவர்கள் சிற்றரசர்களாயினர்.

தொடர்ந்து விஜயாலய சோழர்...