தமிழ் மன்னர்கள் - Tamil Kings

தமிழ் மன்னர்கள்
சங்க கால மன்னர்கள் பற்றியும், பிற்கால தமிழ் மன்னர்களின் விபரங்களும்.

சங்க காலம்:

சங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை. இந்தக் கால கட்டத்தில்
ஆட்சி செய்த தமிழ் மன்னர்களைப் பற்றி மிக குறைவான தகவல்களே கிடைத்துள்ளன.

தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும் பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மஹாபாரதமும், ராமாயனமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது.

அசோகரின் குறிப்புகளும் தனது நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள அரசுகள் என்று சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் பற்றிக் கூறுகிறது. ரோமுக்கும் இந்தியாவிற்குமிடையில் பெருகி வந்த வர்த்தகத்தை தாலமி குறிப்பிடுகிறார்.

சங்க காலத்தின் இறுதியில் மதுரையைக் கைப்பற்றிய களப்பிரர்கள் சங்க காலச் சிறப்புகள், தகவல்களை அழித்து விட்டதாக கூறப்படுகிறது.


பிற்கால மன்னர்கள்:

கி.பி.500க்குப் பிறகு பல்லவர் ஆட்சியைப் பற்றி சான்றுகள் உள்ளன. சுமார் கி.பி.590ல்
கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்று மதுரையை மீண்டும் கைப்பற்றிய பிறகே தமிழ் இலக்கியம், சிற்பம், ஓவியம் ஆகியவை மீண்டும் தழைத்தோங்கியது.

மன்னர்களின் ஆட்சிக் காலங்கள் பற்றிய விபரங்களைப் பெற பெயர்களில் க்ளிக் செய்யவும்.
பல்லவர் கி.பி.500 - 912 வரை. தொடர்ந்து சோழர்கள்.
விஜயாலய சோழர் கி.பி. 850 - 1071 வரை.
சாளுக்கிய சோழர் கி.பி. 1071 - 1279 வரை.
இதே கால கட்டங்களில் பாண்டியர் ஆட்சியும் தொடர்ந்து நடைபெற்றது.
பாண்டியர் - I கி.பி. 590 - 920 வரை. பின் சோழர்களிடம் சிற்றரசர்கள்.
பாண்டியர் - II கி.பி. 1187 - 1308 வரை.