விஜயாலய சோழர் - Vijayalaya Chola Kings

விஜயாலய சோழர்
ஆட்சிக் கால விபரங்கள்.

காலம் (A.D.) மன்னர்கள்
850-71 விஜயாலயன்
871-907 ஆதித்யன் I
907-55 பராந்தகன் I
955-56 காண்டாராதித்யன்
956-57 அறிஞ்ஜெயன்
957-73 சுந்தரச் சோழ பராந்தகன்
973-85 உத்தமச் சோழன்
985-1014 ராஜராஜன் I
1012-44 ராஜேந்திரன் I
1044-54 ராஜாதிராஜன்
1054-64 ராஜேந்திரன் II
1064-70 வீர ராஜேந்திரன்
1070-71 ஆதி ராஜேந்திரன்

சின்னம்: புலி
தலைநகர்: உறையூர், காவிரிபூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம்.

விஜயாலயனின் தலைநகர் தஞ்சை. தொடர்ந்த முதலாம் ஆதித்யன் சோழமண்டலம், தொண்டைமண்டலம், கொங்கு நாடு
ஆகியவற்றை முழுமையாக தனது ஆளுமையில் கொண்டு வந்தான். சுந்தர சோழன் காலத்தில் பாண்டிய நாடு சோழர்
ஆட்சியிலிருந்து விடுபட்டது.

முதலாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில், சங்க காலத்திய கரிகால் சோழன் போன்று புகழும் சிறப்பும் அடைந்தான். தஞ்சை
பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டத் துவங்கினான். இலங்கையின் சில பகுதிகளையும், மேற்கு சாளுக்கியர்களின் மைசூர், சேர நாடு
ஆகியவற்றையும் வென்றான். முதலாம் ராஜேந்திரன் அதைத் தொடர்ந்து இலங்கை, ஸ்ரீவிஜயம், கலிங்கம் ஆகியவற்றை முழுமையாக கைப்பற்றினான். வங்காளத்தைச் சேர்ந்த மஹிபாலனை வென்று கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் பெற்றான். சோழர்களின் வலிமை உச்சத்தில் இருந்த இக்காலத்தில் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான்.

இலங்கையை ஆண்டவர்களும், சாளூக்கியர்களும் சோழர் ஆட்சியிலிருந்து விடுபட தொடர்ந்து முயன்று வந்தனர். வீர ராஜேந்திரன் இலங்கையின் நுலாம்பர்களுடனும் சாளூக்கியர்களுடனும் போரிட்டு ராஜ்யத்தை தக்க வைத்துக் கொண்டான். இதன் பின்னர்
சோழர் வலிமை குன்றத்துவங்கியது.

தொடர்ந்து சாளுக்கிய ‍ சோழர்கள் ...