35mm, போலராய்ட், டிஜிட்டல், வ்யூ, மீடியம் பார்மாட் - Types of Cameras

35mm, போலராய்ட், டிஜிட்டல், வ்யூ, மீடியம் பார்மாட்
எல்லா வகை கேமராவிலும் ஒரு சில தனித்தன்மைகள் உண்டு. பழமை போல தோற்றமளிக்கும் பெரிய பார்மாட் 'வ்யூ' கேமராக்கள் கூட மற்ற வகைகளை விட ஒரு சில விஷயங்களில் சிறந்தது தான்.

Camerasஎல்லா வகை கேமராவிலும் ஒரு சில தனித்தன்மைகள் உண்டு. பழமை போல தோற்றமளிக்கும் பெரிய பார்மாட் 'வ்யூ' கேமராக்கள் கூட மற்ற வகைகளை விட ஒரு சில விஷயங்களில் சிறந்தது தான்.

35mm:
உங்களிடம் ஏற்கனவே ஒரு கேமரா இருக்குமானால் அநேகமாக அது 35mm ஆகத்தான் இருக்கும். இந்த வகை மிகவும் பிரபலமாக இருக்க பல காரணங்கள் உண்டு. தற்போது எல்லா வித விலைகளிலும் உங்கள் பர்ஸுக்கும், விருப்பத்துக்கும் ஏற்றவாறு வசதிகளுடன் கிடைக்கிறது. பெரும்பாலும் எளிதான Point & Shoot எனும் எந்த செட்டிங்குகளுக்கும் மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லாத 35mm கேமராக்களே அதிக அளவில் விற்கின்றன.

இத்துடன் 35mm பிலிம் விலையும் அதிகமாக இல்லாததால், இதைத் தவிர வேறு வகைகளை அறியாதவர்கள் ஏராளம். இதில் தரமான படங்களை எடுக்க முடியும் என்பதால் புகைப்பட வல்லுநர்களும் விரும்புகின்றனர்.

போலராய்ட்:
போட்டோ எடுத்தவுடன் படத்தைப் பெறலாம். இந்த ஒரு வசதியைத் தவிர வேறு எதுவும் இதில் கிடையாது. போட்டோ நேரடியாக தாளில் விழுவதால் நெகடிவ் கிடையாது, ஆகவே படத்தின் இன்னொரு காப்பி வேண்டும் என்றால் சிரமம். லென்ஸ் செட்டிங்குகள் எதுவும் கிடையாது. தூக்கிச் செல்ல பளுவானது. படம் எடுக்க அதிக செலவாகும்.

இருந்தும் 'நான் ரொம்ப பிஸி, எனக்கு இந்த நிமிடமே படம் கைக்கு வந்தாகனும்' என்று அடம் பிடிப்பவர்களுக்கு ஏற்ற கேமிரா.

டிஜிட்டல்:
கிட்டத்தட்ட போலராய்ட் கேமிராவிற்கு மாற்று கிடைத்து விட்டது. இதில் எடுக்கப்படும் படங்கள் டிஜிட்டலாக (0 மற்றும் 1) பதிவு செய்யப்படுவதால் பிலிம் கிடையாது. மெமரி சிப்புகள் அல்லது ப்ளாப்பிகள் உபயோகித்து படம் எடுக்கலாம். எடுத்த படத்தை அழித்து திரும்ப திரும்ப எடுக்கலாம். டிஜிட்டல் என்பதால் உடனடியாக கம்ப்யூட்டரில் பார்க்கலாம். ஈ-மெயிலில் நன்பர்களுக்கு உடனடியாக அனுப்பலாம். தரமான கலர் இங்க்ஜெட் ப்ரிண்டரில் தரமான தாள் உபயோகித்து கலர் லேப்பில் கொடுக்கும் படம் போன்ற தரத்தில் படம் பெறலாம்.

இதில் எடுக்கும் படங்களின் தரம் மற்ற படங்களுக்கு இணையாக சொல்ல முடியாது. ஆனால் இது வேகமாக மாறி வருகிறது. விலைகளும் படுவேகமாக குறைந்து வருகின்றன.

பெரிய பார்மாட் (வ்யூ கேமராக்கள்):
இதை உபயோகிப்பதற்கே சிறப்புப் பயிற்சி பெற வேண்டும். ஒவ்வொரு படத்திற்கும் நெகடிவ்வை தனித்தனியாக கேமராவில் கழற்றி மாட்ட வேண்டும். ஆட்டோமாடிக் வசதிகள் எதுவும் கிடையாது. தூக்கிச் செல்ல பலசாலியாக இருக்க வேண்டும். விலை கூட குறைவு அல்ல. ஆனால் இதில் எடுக்கும் படங்களை மிகப் பெரிய விளம்பரப் பலகைகள் (Bill boards) அளவுக்குப் பெரிதாக்கினாலும் படம் தெளிவாக இருக்கும். இதில் எடுக்கும் படங்களின் வியாபார மதிப்பு அதிகம்.

இதில் ஒரு படம் எடுக்க நிறைய மெனக்கெட வேண்டும். நெகடிவ்கள் 4"-5" முதல் 11"-14" வரை இருக்கும். வல்லுநர்களுக்கான சமாச்சாரம்.

மீடியம் பார்மாட்:
சிறந்த புகைப்படக் கலைஞர்கள் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். பல போட்டோ ஸ்டூடியோக்களில் பார்த்திருக்கலாம். நெகடிவ், 35mm-ஐ விட இரண்டு மூன்று மடங்கு பெரியது. படங்களை ஆளுயரம் வரை பெரிதாக்கினால் கூட தெளிவாக இருக்கும்.