பஞ்சலோக சிலைகள் - Panchaloka Statues

பஞ்சலோக சிலைகள்
பஞ்சலோகம் என்றால் என்ன? அதற்கு சான்றுகள் உள்ளதா?

- ஸ்ரீகாந்த், M.A.,

சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும்
கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.

ஆனால் ரசாயன ஆய்வில் மியூசியத்தில் உள்ள பல்வேறு காலத்திய பஞ்சலோக சிலைகளில் இதுவரை தங்கம், வெள்ளி ஆகியவை
கலந்திருப்பதாக கண்டறியப்படவில்லை. பல்வேறு நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட சிலைகளின் உலோகக் கலவை பற்றிய பட்டியல் கீழே.

பஞ்சலோக சிலைகளின் ரசாயண ஆய்வு முடிவுகள்

உலோகங்கள் கி.பி. 9ம் நூற்றாண்டு கி.பி. 10-11ம் நூற்றாண்டு கி.பி. 13ம் நூற்றாண்டு கி.பி. 15ம் நூற்றாண்டு கி.பி. 17ம் நூற்றாண்டு
செம்பு
Copper
83 - 39 86 - 88 91 - 05 96 - 29 91 - 25
தகரம்
Tin
16 - 61 10 - 44 2 - 86 2 - 58 6 - 66
ஆர்செனிக்
Arsenic
Tr Tr Tr Tr Tr
ஈயம்
Lead
Tr 1 - 48 6 - 09 1 - 9 2
இரும்பு
Iron
Tr 1 - 19 Tr 0 - 06 0 - 07

(Source: The proceedings in the Indian Academy of Sciences, Vol. XIII, No.1, p 53 - 63, 1941)