புகைப் பழக்கம்-Smoking

புகைப் பழக்கம்
புகைப் பழக்கம் மற்றும் புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களுக்கான காரணங்கள்...

புகைப் பழக்கம் மற்றும் புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்கள் தொடர்வதற்கு புகையிலையில் உள்ள நிகோட்டின் தான் காரணம். இது உபயோகிப்பவர்களுக்கு ஒரு வித மயக்கத்தை அளித்து பழக்கத்தை தொடரத் தூண்டுகிறது.

நிக்கோட்டின் என்றால் என்ன?
இது இயற்கையாக கிடைக்கக்கூடிய திரவ அல்கலாய்ட். அல்கலாய்ட்கள் பொதுவாக உடலையும் மூளையையும் தூண்டி விடக்கூடியவை. நாம் பரவலாக உபயோகிக்கும் மற்றொரு அல்கலாய்ட் காப்பியில் உள்ள 'காஃபெய்ன்' (Caffeine).

புகையிலை பழங்காலத்திலிருந்தே அமெரிக்காவில் பழங்குடியினரால் உபயோகிக்கப்பட்டு வந்தது. அங்கிருந்து ஐரோப்பாவிற்கு பெருமளவு புகையிலையை ஏற்றுமதி செய்த ப்ரெஞ்சுக்காரரான 'ஜீன் நிகோட்' என்பவரது பெயரைக் கொண்டு இது 'Nicotiana Tobaccum' என்ற தாவரவியல் பெயரைப் பெற்றது. இதில் உள்ள முக்கியமான ரசாயனப் பொருளுக்கும் நிகோட்டின் என்ற பெயரே நிலைத்து விட்டது.

புகைப்பிடிப்பதால் வரும் கேன்சர், மூச்சடைப்பு போன்றவற்றிற்கு புகையிலையில் உள்ள மற்ற ரசாயனங்களே காரணம். ஆனால் நிகோட்டின் அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது. இது தனியாக தயாரிக்கப்பட்டு பூச்சிக்கொல்லியாக விற்கப்படுகிறது. வெறும் 60மில்லிகிராம் நிகோட்டின் ஒரு மனிதனைக் கொல்லக் கூடியது. வருடாவருடம் சிகரட் துண்டுகளை மென்ற குழந்தைகள் அவசர சிகிச்சைக்கு அட்மிட் ஆவது அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து..... புகைப்பிடித்தால் நுரையீரலில் என்ன நடக்கிறது?
Top மேலேGo Top