விடலைத் தற்கொலைகள் - Teen suicides

விடலைத் தற்கொலைகள்
18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதன் பின்னனியில் உள்ள நமது 'பிஸி' வாழ்க்கை முறையைப் பற்றிய ஒரு பார்வை.

வாழ்க்கையை ஆர்வமாக கற்றுக் கொள்ளும் வயதில் வாழ முடியாத முடிவுக்கு வந்து 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதில் புள்ளி விபரங்கள் காட்டும் எண்கள் மிகக் குறைவு என்கிறார்கள் மனவியலாளர்கள். முடிந்த வரை இதனை விபத்தாக வெளியில் சொல்லும் குடும்பங்களே அதிகம்.

காரணம் என்ன?
பெரும்பாலான பதில்கள் ஊகங்களே. ஆனால் எதாவது ஒரு காரணத்திற்காக மட்டும் இவர்கள் அவசரப்பட்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என எந்த மனவியல் மருத்துவரும் நம்பத் தயாராக இல்லை.

பெற்றோர், வளர்ப்பு பெற்றோர் ஆகியோரிடம் மிகுந்த மன வேறுபாடு; அவர்கள் அளித்த தண்டனை மிக கொடியது என இவர்கள் நினைப்பது; 'காதல்' பிரச்னைகள்; பள்ளியிலும் தேர்விலும் சாதித்தாக வேண்டிய நிர்பந்தம், சிதைந்த குடும்ப வாழ்க்கை; தாங்க முடியாத நோய்கள் ஆகியவற்றில் பல காரணங்களின் கூட்டே சிறுவர்களை வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு தள்ளுகிறது.

தனிமை:
தனிமையே விடலை (Teenage) பருவத்தினரின் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தாய், தந்தை இருவரும் வேலைக்குப் போகும் தனிக்குடித்தனங்களில் முக்கியமாக சிறு குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் பெற்றோரிடமிருந்து அதிகமான நேரம் பிரிந்திருக்க நேர்வது இதற்கு அடித்தளமாகக் கருதப்படுகிறது. பெற்றோர்களும் குழந்தைக்காகவே அதிகம் உழைப்பதாகச் சொன்னாலும்