உலகம் முழுவதற்கும் ‍ஒரே செல்போன் (ட்ரை-பேண்ட் செல்போன்) - Triband Cell Phones

உலகம் முழுவதற்கும் ‍ஒரே செல்போன் (ட்ரை-பேண்ட் செல்போன்)
உலகம் சுற்றும் போது சொந்த ஊரில் உபயோகிக்கும் அதே செல்போனை, அதே நம்பரில் தொடர்ந்து உபயோகிக்கலாம்.

உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பேசக் கூடிய செயற்கைக் கோள் போன் கம்பெனி மூடப்பட்டு விட்டது. இப்போது நகரவாசிகளின் கையில் எப்போதும் காணப்படும் செல்போனே அந்த வேலையை செய்ய முற்பட்டிருக்கிறது.

ஒரே செல் போனை இது வரை நாடு முழுவதும், அல்லது அண்டை நாடுகளிலும் பயணம் செய்யும் பொழுது உபயோகிக்க வழி இருந்தது (தொகை தான் அதிகம்). ஆனால் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கோ அமெரிக்காவிற்கோ நீங்கள் சென்றால், உங்களது ஆசிய செல்போன் அங்கு வேலை செய்யாது. இதற்குக் காரணம், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் முற்றிலும் வேறுபட்ட அலைவரிசைகளில் செல்போன் வேலை செய்கிறது.

<அ name="threebands" class="vazhi">மூன்று பாண்ட் அலைவரிசைகள்
இந்த மூன்று அலைவரிசைகளிலும் செயல்படக்கூடிய ட்ரை-பேண்ட் செல்போன் வந்து விட்டது. இதன் மூலம், நீங்கள் ஜப்பான் போய் அங்கிருந்து அமெரிக்கா பின் ஐரோப்பா வழியாக ஆசியாவிற்கு திரும்பினாலும், நீங்கள் சொந்த ஊரில் உபயோகிக்கும் அதே செல் நம்பரில் உங்களைத் தொடர்ந்து தொடர்பு கொள்ளலாம். மேலும் நீங்கள் ஒரே ஒரு செல்போனை மட்டும் எடுத்துச் சென்றால் போதும்.

அடிக்கடி ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும், ஆசியாவிற்கும் பறக்கும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு இது மிக வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.