நாங்கள் (About Us)

களஞ்சியம், லாப நோக்கில்லாத ஒரு முயற்சி. தமிழ் மூலம் தகவல்களை அறிவது தமிழ் நாட்டில் பலருக்கும் இயல்பானதாக இருக்கிறது. ஆங்கிலத்தில் சரளமாக பேசும், படிக்கும் வல்லமை பெற்றவர்களுக்கும் தான். ஆகவே, தமிழ் மூலமாக பல நுணுக்கங்களை அறிய ஒரு இயல்பான வழியாக இந்த களஞ்சியம் உருவாக வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.

இது பலரும் பங்கு பெறும் முயற்சியாக மலர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இந்த தளத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய மிக ஆவலாக இருக்கிறோம்.

இது தமிழ்த் தளம் என்பதை விட, இயல்பாக விஷயஞானம் பெறும் தளம் என்பதே எமது குறிக்கோள். ஆகவே, நிஜ வாழ்க்கையைப் போல் இங்கே ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களுக்கு தடையில்லை. விஞ்ஞானம் போன்ற விஷயங்களில் ஆங்கிலப்பதங்கள் தவிர்க்க முடியாதவை. முழுவதுமாக ஆங்கிலத்தில் படிப்பதை விட - பெரும்பாலும் தமிழ், சில முக்கியப்பதங்கள் ஆங்கிலம் - என்பது 'கான்வென்ட் தமிழர்'களுக்கும் உடனடியாக புரிபவை. இந்த வழியில் நீங்கள் தேர்ச்சி பெற்ற துறையைப் பற்றி மற்றவருக்கும் விரிவாக்க விரும்பினால் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்.

View Site Profile in English